பராசர முனிவர் தமது தந்தையைக் கொன்ற உதிரன் என்னும் அசுரனை அழிக்க யாகம் ஒன்றை நடத்தி அவனைக் கொன்றார். அதனால் ஏற்பட்ட பாவம் நீங்குவதற்கு பல தலங்களுக்கு யாத்திரை செய்தார். பராசர முனிவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவபெருமான் அவருக்குக் காட்சிக் கொடுத்து விமோசனம் அளித்தார். பராசரருக்கு இறைவன் அழகிய வடிவில் காட்சி கொடுத்ததால், இத்தலத்து மூலவர் 'சுந்தரேஸ்வரர்' என்னும் திருநாமம் பெற்றார்.
மூலவர் சுந்தரேஸ்வரர், களிகாமேஸ்வரர் என்னும் திருநாமங்களுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'அழகம்மை', 'சுந்தராம்பாள்' என்னும் திருநாமங்களுடன் காட்சி அளிக்கின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் செல்வ சித்தி விநாயகர், வில்வவனநாதர், பராசர முனிவர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
பராசர முனிவர் வழிபட்ட தலம். ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. (நேரம் காலை 8-9)
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 10 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 வரையிலும் திறந்திருக்கும். தொடர்புக்கு : இராஜாமணி குருக்கள் - 9715170451.
|